• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் – அதிமுகவுக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு

March 22, 2019 தண்டோரா குழு

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் என ஜெ.தீபா கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக 40 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது. இதற்கிடையில், தொண்டர்களின் விருப்பம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாவும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் ஜெ.தீபா தெரிவிருந்தார். இந்நிலையில், இன்று திடீரென அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா,

அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது என சேலத்தில் நடந்த பேரவை பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.அதிமுகவின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை; மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர். அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும்; அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பரப்புரை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க