• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்த்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

September 12, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (செப் 12) நடைப்பெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரையாற்றினார்.தீர்மானத்தை ஆர்.பி. உதயகுமார் வாசித்தார்.இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்தது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட மேலும் சில முக்கிய தீர்மானங்கள்

இரட்டைஇலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.ஜெயலலிதா நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த பதவிகளில் நீடிப்பார்கள்.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அரசுக்கு பாராட்டு.

இரு அணிகள் இணைந்த நிலையில் ஒரே கட்சியாக கொண்டு வர வேண்டும். ராமர், லட்சுமணர் போல் நாட்டை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீட்டு எடுத்துள்ளனர் என்றார்.ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனத்துக்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அ.தி.மு.க.வில் இனி ஒருவரை சேர்க்கவும், நீக்கவும் பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

மேலும்,அதிமுகவின் நிரந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான்.அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே இல்லை என சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க