September 11, 2017
தண்டோரா குழு
அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.முக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வெற்றிவேல் தனிப்பட்ட முறையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளார்,எனவே அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிகளின் பொதுக் குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததிற்காக வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.