• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

March 13, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா-வுக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்டுள்ளன.

இந்நிலையில், அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுவுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ்,

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா-வுக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. 21 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு த.மா.கா ஆதரவு அளிக்கும் என்றார்.

மேலும் படிக்க