• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக இரு அணிகள் விரைவில் இணையும் – எடப்பாடி பழனிச்சாமி

August 19, 2017 தண்டோரா குழு

அதிமுக இரு அணிகள் விரைவில் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார். அதிமுகவை ஜெயலலிதா கண்ணை காப்பது போல் காத்து மக்களுக்கு தன்னுடைய ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் அறிவித்துள்ளார். இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதுவும் தற்போது பேச்சு மூலம் சரி செய்யப்பட்டு விரைவில் இரு அணிகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும், மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியதாக வெளியான செய்தி தவறு எனக் கூறினார்.

மேலும் படிக்க