• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுகவை உங்கள் தந்தையாகவே ஒன்று செய்ய முடியவில்லை, உங்களால் முடியாது ஸ்டாலின் – ஓ.பி.எஸ்

April 2, 2019 தண்டோரா குழு

அதிமுகவை உங்கள் தந்தையாகவே ஒன்று செய்ய முடியவில்லை, உங்களால் முடியாது ஸ்டாலின் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

கோவை மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

எம்.பி. தேர்தலில், எஜமானவர்களாக இருந்து தீர்ப்பு வழங்கும் இடத்தில் உள்ள வாக்காளர்கள் கடந்த காலத்தில் மத்தியில் அங்கம் வகித்த திமுக, அதிமுக கூட்டணியில் யார் ஆட்சியில் நல்ல திட்டங்களை அறிமுக படுத்தினார்கள். தொலைநோக்கு திட்டங்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஜீவாதார உரிமைகளுக்கு காப்பாற்ற பொறுப்பில் இருந்து அதை செய்ய தவறினார்கள். மக்களுக்கு யார் நல்ல ஆட்சியை வழங்கினார்கள் என்பதை எடைப்போட்டு வாக்களியுங்கள் திமுக ஆட்சியில் நடந்த “காட்டு தர்பார்” முடிவுக்க கொண்டு வர வேண்டும். கொலை, கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு, நில அபகரிப்பு, அடிமாட்டு விலைக்கு தனிமனித சொத்தை வாங்குவது என 2006-2011 வரை 5 ஆண்டுகள் இருந்த சூழ்நிலையில், 2011ல் கோவை வ.உ.சியில் நடந்த கூட்டத்தில் கிடைத்த ஆதரவு அலை திருச்சியில் சுனாமியாக மாறி, மதுரைக்கு வந்து திமுகவை அடித்து கடலில் போட்டதிலிருந்து இன்று வரை எழுந்திருக்க முடியவில்லை. 2011, 2014, 2016 என தொடர் தோல்வியை திமுக தழுவியது. 2011 முதல் 2016 வரை 5 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கிடைத்ததால், 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சி மீண்டும் ஆண்டும் வரலாற்றை ஜெயலலிதா செய்து காட்டினார்.

திமுக-காங்கிரஸ் 10 ஆண்டுகள் கூட்டணியில் 9 திமுக அமைச்சர்கள் மத்தியில் அங்கம் வகித்தும், ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசிற்கு தமிழக அரசு வரியாக செலுத்தியும் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. சேது சமுத்திர திட்டத்தை ஜெயலலிதா, தோல்வி திட்டம் என்பதை ஆய்வின் மூலம் சுட்டிக்காட்டியும், டி.ஆர்.பாலும் பிடிவாதமாக இருந்ததால் ரூ. 40,000 கோடி கடலில் போட்டார்கள். கடலில் போட்டார்களா, வேறு எதிலாவது போட்டார்களா என தெரியவில்லை என ஓ.பி.எஸ். சொல்லும்போது, கூடியிருந்த மக்கள் துரைமுருகன் வீட்டில் என முழங்கினார்.

ஸ்டாலின் அவராக பேசுகிறார், அவராக சிரிக்கிறார்; அதிமுகவை உங்கள் தந்தையாகவே ஒன்று செய்ய முடியவில்லை, உங்களால் முடியாது ஸ்டாலின், எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது: தமிழக முழுவதும் விழுதுகள் படர்ந்துள்ள அதிமுக, மழை, புயல், சுனாமி, பூகம்பம் என எதுவும் செய்ய முடியாது. மாமன், மச்சான் சண்டையில் நீங்கள் தான் 3 உயிர்களை பலி கொடுத்தீர்கள் என தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி வன்முறை கலாச்சாரத்தை தமிழகத்தில் கட்டவிழ்த்தது திமுக என பிரியாணி, புரோட்டா என எதுவும் காசில்லை என்றால் குத்து குத்துனு குத்துகிறீர்கள் என சாடினார். 2011ல் ஸ்டாப்களின் ஜோசியர் பேச்சை கேட்டு கலர் கலராக dress போட்டு வந்தார், கரும்பு தோட்டத்திற்குள் அவர் செல்வதற்காக சின்ன சாலை போட்டும் எதுவும் நடக்கவில்லை என்றவர், டீக்கடையில் டீ குடித்தார் அது அதிசயமா, ஆனால் நாம் டீக்கடையை நடத்தியவர்கள் என்றார்.

மேலும், விழிப்புணர்வு பெற்றவர்கள் கோவை மக்கள் தேனியை போல் சுறுசுறுப்பாக நாள் முழுவதும் உழைபவர்கள்.இந்த பகுதியில் உள்ள பல்வேறு தேவையான அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பதில் நல்ல எம்.பி.யாக சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என்றார்.

மேலும் படிக்க