• Download mobile app
13 May 2026, WednesdayEdition - 3745
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி

June 12, 2019 தண்டோரா குழு

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்த நடிகர் ராதாரவி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு திமுகவில் இணைந்தார். அதன் பின் பல்வேறு கூட்டங்களில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.இதற்கிடையில், அண்மையில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ராதா ரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ராதாரவி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என ராதா ரவி கூறியுள்ளார்.

மேலும் படிக்க