• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை

April 26, 2017 தண்டோரா குழு

அதிமுகவின் இரு அணிகளுக்கிடையே இன்று பேச்சுவார்த்தை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதாக ஓபிஎஸ் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் தெரிவித்து வந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இரு அணிகளைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

எடப்பாடி அணி சார்பில் செங்கோட்டையன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், ஓபிஎஸ் அணியில் இருந்து கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் மாலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதனை உறுதி செய்யும் வகையில், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் இடம் பெற்றுள்ள வைத்திலிங்கம் கூறுகையில்,

“அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு நீங்கி இரு அணிகளும் விரைவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அம்மா அணி இணைவதையே தொண்டர்களும் மக்களும் விரும்புகின்றனர். விரைவில் இரு அணிகளும் இணையும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெறும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் இரு அணிகள் சார்பிலும் தலா 7 பேர் இடம் பெறுவார்கள்.

மேலும் படிக்க