• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிநவீன தேஜஸ் விமானம் கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்ப்பு!

May 27, 2020 தண்டோரா குழு

மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் கோவை சூலூர் விமான படைத்தளத்தில் இந்திய விமான படை ஏர் சீப் மார்ஷல் பதோரியா தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்திய விமான படையில் இணைக்கப்பட்டது.

இந்திய விமானப் படையின் 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் ஏற்கனவே தேஜஸ் மார்க் 1 ஐ.ஓ.சி வகையை சேர்ந்த 20 விமானங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இதில் கூடுதல் வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் இன்று இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது. சூலூரில் உள்ள இந்திய விமான தளத்தில் இந்திய விமான படை தலைவர் ஏர்சீப் மார்சல் பதோரியா முன்னிலையில் இந்த தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி விமானம் இன்று விமானபடையில் இணைக்கப்பட்டது.நவீன ரக தேஜஸ் விமானம் இருந்த அரங்கை ரிப்பன் வெட்டி இந்திய விமான படை ஏர் சீப் மார்ஷல் பதோரியா திறந்து வைத்தார்.

பின்னர் அனைத்து மத குருமார்கள் கலந்து கொண்ட சர்வ தர்ம பூஜா நடத்தப்பட்டது. இதில் இந்து, இஸ்லாமிய,கிறிஸ்தவ, சீக்கிய மேற்படி மத சடங்குள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக விமானம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.

இந்திய விமானபடை ஏர்சீப் மார்ஷல் பதோரியா பேசுகையில்,

சூலூர் விமான படை தளத்தில் இரண்டவது தேஜாஸ் எப்.ஒ.சி விமானம் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தேஜாஸ் விமானமானம் அதிநவீன தொழில் நுட்பதிலும் முதன்மையானது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் இது என்பதும் நமக்கு பெருமையானது.இந்திய விமானபடையினருக்கு தேவையான உபகரணங்கள்,விமானங்கள் உள்நாட்டில் தயாரிக்க தனியார் தொழில்துறையினர் மற்றும் சிறுகுறு தொழில்துறையினர் முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க