June 20, 2020
தண்டோரா குழு
அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து பறிமுதல் செய்யபட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாவட்ட எல்லைப் பகுதியான தெக்கலூர் பகுதியில் வாகன சோதனைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பூரில் இருந்து தனி மனித இடைவெளி இன்றி ஏராளமான பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து இன்று கோவைக்கு வந்தது. அப்போது அப்பேருந்தை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்யவும், ஓட்டுனர் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்திரவிட்டார்.