• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவிற்கு தடையில்லை – உயர் நீதிமன்றம்

May 18, 2017 தண்டோரா குழு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என்று தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் தற்போது துணை வேந்தர் இல்லாமல் இயங்கி வருகிறது.இதனிடயே, அண்ணா பல்கலைக்கழகத்தின், 37-வது பட்டமளிப்பு விழா மே 19-ம் தேதி (நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர் இல்லாத நிலையில் அவருக்கு மாற்றாக வேறு ஒரு உயர் அதிகாரியைக் கொண்டு சான்றிதழில் கையெழுத்திட்டு பட்டமளிப்பு விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தடை விதிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. யுஜிசி விதிகளின்படி துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் செல்லாது என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் பல்கலைக்கழக விதிகளின் அடிப்படையில் பட்டமளிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கையெழுத்து செல்லாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி ஆசிரியர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும்,அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தும், திட்டமிட்டபடி விழா நடக்கும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் படிக்க