• Download mobile app
05 Mar 2026, ThursdayEdition - 3676
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடுத்த மூன்று சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு பங்குதார விஐ நிறுவனமாக இணைந்துள்ளது!

March 5, 2026 தண்டோரா குழு

இந்தியாவில் மிக விரைவில் வரவிருக்கும் கிரிக்கெட் போட்டி தொடரின் முன்னணி அணியான சென்னை சூப்பர் கிங்ஸுடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்ப்பதாக, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான விஐ அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒன்றிணைக்கவும், வலுவான நெட்வொர்க் மூலம் அவர்களுக்கு சிறப்பான இணைய சேவை அனுபவங்களை வழங்கவும் விஐ நிறுவனம் எடுத்துள்ள மிக முக்கியமான வியூகமாக இந்த கூட்டு செயல்பாடு அமைந்துள்ளது. இந்த கூட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சீருடையில் முன்பக்க பகுதியில் விஐ நிறுவனத்தின் முத்திரை சின்னம் இடம்பெறும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருக்கும் விஐ,டிஜிட்டல் தளங்கள் மற்றும் மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் ரசிகர்களுக்கான பல சிறப்பம்சங்களை வழங்கவுள்ளது.விஐ வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக மீட் அண்ட் க்ரீட் சந்திப்புகள் அதிகாரப்பூர்வ கையொப்பமிடப்பட்ட பொருட்கள் மற்றும் போட்டிக்கான டிக்கெட்டுகள் போன்ற பல்வேறு உற்சாகமான செயல்பாடுகள் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள சிஎஸ்கே ஆதரவாளர்களையும் கிரிக்கெட் ரசிகர்களையும் ஒன்றிணைக்க உள்ளது.

விஐ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை அதிகாரி அவனீஷ் கோஸ்லா கூறுகையில்

எல்லோரையும் ஒன்றிணைக்கும் இந்த உறவை எல்லோருக்குமானதாக சாத்தியமாக்குவதுதான் விஐ நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.கிரிக்கெட் மீதான ஆர்வம், களத்தில் போராடும் செயல்பாடு மற்றும் எந்த சூழலிலும் தொடரும் விடாமுயற்சி போன்ற குணாதிசயங்கள், விஐ நிறுவனத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன.இதனால் ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எங்களின் இந்த கூட்டணி ஒரு வலுவான இணைப்பாகும். நாங்கள் இணைந்து, ரசிகர்கள் நேசிக்கும் இந்த விளையாட்டுடன் அவர்களை மேலும் நெருக்கமாக்குவோம்.

தடையற்ற கனெக்டிவிட்டி மூலம் கிரிக்கெட் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் சிறப்பானதாக மாற்றி இந்த விளையாட்டைக் கொண்டாடுவோம்” என்று தெரிவித்தார்.

“சூப்பர் கிங்ஸ் குடும்பத்திற்கு விஐ நிறுவனத்தை வரவேற்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூப்பர் கிங்ஸ் அகாடமியுடனான இந்த கூட்டு செயல்பாடானது, அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் எங்களிடையே இருக்கும் பொதுவான அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

விஐ நிறுவனத்தின் வலுவான டிஜிட்டல் சேவைகள் மற்றும் இளைய தலைமுறையினருடனான தொடர்பு ஆகிய இரு அம்சங்களும், கிரிக்கெட் ரசிகர்களுடனும் வருங்கால வீரர்களுடனும் நெருக்கமான உறவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தோடு சரியாக பொருந்துகிறது. நாங்கள் ஒன்றாக இணைந்து, மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கிறோம்” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன் கூறினார்.

மேலும் படிக்க