August 27, 2020
தண்டோரா குழு
பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையே முதல் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ARIIA என்பது கல்வி அமைச்சகத்தினால் (MOE) தொடங்கப்பட்டது. மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகிறது.இது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இடையே புதிய முறைகள் அவற்றின் தொடக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு தொடர்பான அளவீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களை முறையாக தரவரிசைப்படுத்த தொடங்கப்பட்டது.
ARIIA தரவரிசை உலகளவில் போட்டி மற்றும் புதுமையின் முன்னணியில் இருப்பதற்கான திசையை காட்டியுள்ளது. மேலும் உயர்தர ஆராய்ச்சி,புதுமை மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் செய்கிறது.
அடல் (ARIIA) தரவரிசை 2020 அளவீடுகள்/வரையறைகள்
HEI யை கருத்தில் கொண்டு பின்வரும் அளவீடுகளை அடிப்படையாக வைத்து புதிய சுற்றுச்சூழலை தொடங்குதல் மற்றும் புதியவற்றை மதிப்பிடல்.
*IBR தொடர்பான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், புதிய முறைகள், புதிய தொடக்கங்கள் மற்றும் தொழில் முனைதல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள்.
*I&E ஐ ஊக்குவிக்க தேவையான முன்னேற்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்.
*I&E செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும், ஆதரிப்பதற்கும் வருடாந்திர வரவு செலவு.
*புதிய கண்டுபிடிப்புகள் ஐபிஆர் (IBR) மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த படிப்புகள்.
*அறிவுசார் ஆய்வுகள் ( Intellectual property) தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகமயமாக்கல்.
*வெற்றிகரமான புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொடக்கங்கள் மற்றும் இவற்றிற்கு நிதி உதவி ஒதுக்குதல்.
ARIIA தரவரிசை நிச்சயமாக உயர்தரமான ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக மனநிலையை மாற்றி அமைக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கவும் நிறுவனங்களை ஊக்குவிக்கும். பி.எஸ்.ஜி.ஆர்.
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையே முதல் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கிராமப்புறப் பெண்கள் தொழில்நுட்ப பூங்கா (RWTP) DST வழங்கும் நிதி உதவியுடன் செயல்படுகிறது. இளநிலை தொழில் கல்வி திட்டங்கள் யுஜிசி வழங்கும் நிதி உதவியுடனும், DBT ஸ்டார்,IEDL,IIC,NEN போன்றவையும் சிறந்த உள்கட்டமைப்பு வசதியையும் கொண்டு இக்கல்லூரி விளங்குகிறது.புதிய முறைகளை தொடங்குதல், தொழில்நுட்ப வல்லுநர் மையம், கல்வியாளர் தொழிற்சாலை ஒருங்கிணைந்த திட்டங்கள், இணை ஆசிரியர்களை அழைத்து மாணவர்களுக்கு கல்வி வழங்குதல் போன்ற வையும் கல்லூரி நிதி உதவியுடன் செயல்படுத்தப் படுகின்றன. இவை அனைத்தும் எங்கள் கல்லூரி நிர்வாகத்தினர் , செயலாளர், குழு உறுப்பினர், முதல்வர், இயக்குனர்கள், புல முதன்மையர், பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள், உதவிப் பணியாளர்கள், தொழில் மற்றும் தொழில்முறை பங்குதாரர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர்ச்சியான விடாமுயற்சி மற்றும் இவர்கள் அனைவரது நேர்மையான முயற்சியாலும் ஒத்துழைப்பின் ஆளும் குழு மனப்பான்மையுடன் கூடிய பணியினாலும் கல்லூரி மிகவும் மேம்பாடு அடைந்துள்ளது.
மகளிர் மேம்பாடு என்ற தொலைநோக்கு பார்வை கொண்ட எங்கள் நிறுவனர்கள் ஸ்ரீ ஜி ஆர் கோவிந்தராஜுலு மற்றும் சந்திரகாந்தி கோவிந்தராஜுலு ஆகியோருக்கு இக் இவ்வெற்றியை சமர்ப்பித்து தலை வணங்குகிறோம்.அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ ஜி. ரங்கசாமி மற்றும் கல்லூரி தலைவர் டாக்டர் ஆர். நந்தினி ஆகியோர் ஜி ஆர் ஜி பதாகையின் கீழ் தலைமை பண்புகளோடு விளங்கி மற்றவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.