October 7, 2017
தண்டோரா குழு
அஞ்சலக சேமிப்புகளுக்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து வருகிறது.வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் செய்யப்பட்ட நிலையில்,தற்போது அஞ்சல் சேமிப்பு திட்டங்களான தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஷ் பத்திரம், பப்ளிக் பிரோவிடண்ட் பன்ட் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே அஞ்சலகங்களில் டெபாசிட் செய்து வருபவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.