September 28, 2020
தண்டோரா குழு
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
செப்.25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒட்டுமொத்த திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தார்கள்.
நடிகர் விஜய் எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்படும் முன்பு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையில், எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த அஜித் நேரில் வரவுமில்லை, இரங்கல் அறிக்கை கொடுக்கவுமில்லை.இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் அஜித் எனக்கு நல்ல நண்பர். அஜித் வர வேண்டிய அவசியம் இல்லை. அவர் எங்கிருந்து மரியாதை செலுத்தியிருந்தால் என்ன? அதுபற்றி பேச வேண்டியதில்லை. இதை ஒரு விஷயமாக பேசவேண்டிய அவசியம் இல்லை. அப்பா இல்லை. எங்களிடம் வதந்திகளுக்கு விளக்கம் கேட்காதீங்க என எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.