December 3, 2025
தண்டோரா குழு
அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250S சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆளுநர் AGA அலை M.குணசேகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில், சேவைகள் தின மாவட்ட தலைவர் அலை ஆர்.கோபாலகிருஷ்ணன்,முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அலை TS விஜயகுமார்,அலை T சீனிவாசன், மாவட்ட செயலாளர் அலை N லோகநாதன், மண்டல தலைவர் S.மாணிக்கம், சூப்பர் கிங்ஸ் சங்க தலைவர் அலை V.இளமுருகன்,நிகழ்சி ஒருங்கிணைப்பாளர் அலை R.சந்தான மாரியப்பன், ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிக்கு, வீல் சேர்கள்,வாக்கிங் ஸ்டிக்குகள், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள்,முதியவர்களுக்கான டையப்பர்கள் மற்றும் பேபி வைப்ஸ் போன்றவை வழங்கப்பட்டது.