• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்தால் 3 மாத சிறைத்தண்டனை தேவையற்றது – நீதிபதி கருத்து

September 22, 2017 தண்டோரா குழு

அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வர மறந்தால் 3 மாத சிறைத்தண்டனை தேவையற்றது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோட்டார் வாகன சட்டப் பிரிவு 139-ன் படி ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது, தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனை எதிர்த்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வர தவறியவர்களுக்கு சிறைதண்டனை அவசியமில்லை என்றும், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும்,எடுத்து வராதவர்களுக்கும் வேறுபாடு உண்டு.
மறந்து அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வராதவர்களுக்கு அபராதம் போதும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேலும் படிக்க