• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அக்னிபாத் வரமா? சாபமா?

July 15, 2022 பா. ஸ்ருதி

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரியும் வகையில் ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தை மத்திய அரசு ஜூன் ௧௪ஆம் தேதி ஆறுமுகம் செய்தது.

இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறையும், ஏற்பட்டது.இதற்கிடையில், இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன.விமானப்படையில் பணி நியமனதுக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந் தேதி தொடங்கியது. ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். கடந்த 7 நாட்களில் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக விமானப்படை தெரிவித்தது.

போராட்டங்கள் ஒரு பக்கம் இருக்க, லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ள நிலையில் நம்மில் பலருக்கும் இந்த அக்னிபாத் திட்டம் வரமா? சாபமா? என்ற சந்தேகம் எழும்.

இந்த திட்டத்தை பற்றி இளைஞர்கள் கருத்து.

“எனக்கு படிப்பு சரியாக வராது. விளையாட்டில் தான் ஆர்வம் அதிகம். நான் மாநில அளவில் தடகள போட்டியில் வென்றுள்ளேன். ஆனால், விளையாட்டை பிரதானமாக என் வாழ்வில் இணைக்க முடியாத சூழல். படிப்பு சரியாக இல்லாமல், வரும் விஷயத்திலும், விளையாட்டிலும் ஈடுபட முடியாமல் ஏதோ ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற வருத்தத்திலிருக்கும் என்னை போன்ற இளைஞர்களுக்கு அக்னிபாத் ஒரு வரப்பிரசாதம். வருமானமும் கிடைக்கும். என் விளையாட்டு திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கும் என்று நம்புகிறேன். நானும் விமானப்படையில் அக்னி வீரனாக பணியாற்ற விண்ணப்பித்து இருக்கிறேன். ” ஜீஷ்ணு, கோவை

அபிஷேக், கோவை கூறியதாவது “நான் வாழ்க்கைத்திறன் மேம்பாடு பயிற்சியாளராக 10 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் இந்தியா முழுவதும் பல இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன். நான் சந்தித்த 100ற்றில் மூன்று இளைஞர்கள் போதை, பாலியல் என பல்வேறு தேவையற்ற விஷயங்களில் அடிமையாகி இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் அந்த அடிமைத்தனத்தின் ஆழம் மிக அதிகம். இது போக இன்னும் துயரமான விஷயம் என்னவென்றால் நம் நாட்டின் இளைஞர்கள் ஒழுக்கம், நேர்மை போன்ற அறத்தை மறந்துவிட்டார்கள். வாழ்வை சீர்குலைக்கும் விஷயங்களில் இளைஞர்கள் திசை மாறாமல் இருக்க அக்னிபாத் திட்டம் ஒரு வரமே.

எந்த திட்டம் வந்தாலும் அதை வரமாக மாற்றுவதும் சாபமாக மாற்றுவதும் நமது கைகளில் தான் உள்ளது. இந்த திட்டத்தை வரமாக வைத்து நமது தேச இளைஞர்கள் தங்கள் வாழ்வை செம்மையாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.”

இந்த திட்டத்தை குறித்து ஆரோக்கியநாதன், முன்னாள் படைவீரர் கூறுகையில்,

” நான் 28 வருடங்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றி உள்ளேன். இந்த வேலையின் சிறப்பு ஒழுக்கம், ஒற்றுமை, அர்ப்பணிப்பு, நேர்மை, தேக ஆரோக்கியம் என பல விசயங்களை உள்ளடக்கியது. நான் கார்கில், சிச்சேன் மலை, அப்பரேஷன் பராகரம் என பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் சேவையாற்றி உள்ளேன்.

இந்த அக்னிபாத் திட்டத்தை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் மக்களுக்கு ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். பொது மற்றும் அரசு உடைமைகளை நாசம் செய்ய வேண்டாம். உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் எந்த குற்றங்களையும் செய்ய வேண்டாம்.

உங்களுக்கு தகுதியிருந்தால், விருப்பமிருந்தால் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய இராணுவத்தில் இணையுங்கள். நாட்டின்மீது நீங்கள் வைத்திருக்கும் அர்ப்பணிப்பை காட்டுங்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்தி 25% நிரந்தர பணியில் தேர்வாக முயற்சி செய்யுங்கள்.” எனக் கூறி முடித்தார்.

மேலும் படிக்க