• Download mobile app
21 Feb 2026, SaturdayEdition - 3664
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக குப்பைத் தொட்டியில் ரூபாய் நோட்டுகளை வீசிய ஆட்டோ டிரைவர் கைது

November 12, 2016 தண்டோரா குழு

மதுராந்தகத்தில் ஃபேஸ்புக் மோகத்தால் ரூ. 500 நோட்டுகளைக் குப்பைத் தொட்டியில் வீசிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சாந்தகுமார். கடந்த 8-ம் தேதி மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த போது, இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தீவிரமாகக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஃபேஸ்புக் மோகத்தால் ஃபேஸ்புக்கில், குப்பையில் பணம் இருப்பது போன்று போட்டோ போட்டு ‘லைக்’ வாங்க விரும்பிய சாந்தகுமார், சுமார் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை குப்பையில் கொட்டினார்.

பின்னர், அதை அப்படியே தனது செல்போனில் புகைப்படம் எடுத்துவிட்டு, அப்பணத்தை மீண்டும் எடுக்க முயன்றார். அப்போது போலீசாரிடம் சிக்கினார். போலீசார் ஆட்டோ ஓட்டுநர் சாந்தகுமாரரைக் கைது செய்தனர்.

மேலும் படிக்க