October 10, 2020
தண்டோரா குழு
ஃபிளிப்கார்ட், அக்டோபர் 16 முதல் தொடங்கவுள்ள – அதன் பண்டிகை கால விற்பனை – பிக் பில்லியன் நாட்களுக்கு தயாராக உள்ளது.இந்த முதன்மை விற்பனை நிகழ்வு லட்சக்கணக்கான விற்பனையாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பிராண்டுகளை ஒருங்கிணைக்கவுள்ளது மற்றும் அதன் 250 மில்லியன்+ நுகர்வோருக்கு பல விதமான தயாரிப்புகளை வழங்கவுள்ளது.
இது குறித்து ஃபிளிப்கார்ட்டில் நிகழ்வுகள், இடையீடுகள் மற்றும் வணிகமயமாக்கல் துணைத்தலைவர் நந்திதா சின்ஹா கூறுகையில்
விற்பனை நிகழ்வுக்கு முன்னதாக, ஃபிளிப்கார்ட் நுகர்வோருக்கு தங்களுக்கு பிடித்த சில தயாரிப்புகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து, தங்கள் ஷாப்பிங் கார்ட்டை கட்டமைக்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. அக்டோபர் 11 முதல் அக்டோபர் 14 வரை நேரலையில் முன்-பதிவு ஸ்டோர் மூலம், நுகர்வோர் தங்கள் ஆர்டர்களை ரூ.1 என்னும் குறைந்த பட்ச விலையில் முன்பதிவு செய்து, கையிருப்பு முடிவதற்கு முன்பு தங்களுக்கு பிடித்த தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை பெற ஒரு வாய்ப்பைஅளிக்கிறது.
முன்பதிவு உறுதி செய்யப்பட்டதும், நுகர்வோர் தி பிக்பில்லியன் நாட்களின் முதல் நாளில், அதாவது அக்டோபர் 16 அன்று தளத்திற்கு திரும்பி வந்து, ஆன்லைனில் பல்வேறு கட்டண முறைகளின் மூலமாகவோ அல்லது கேஷ்-ஆன்-டெலிவரி மூலமாகவோ மீதமுள்ள தொகையை ஆன்லைனில் செலுத்தலாம்.” என்று கூறினார்.