• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபார்முலா E கார் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்

April 29, 2017 தண்டோரா குழு

பாலிவுட் நடிகையும், கார் பந்தய வீராங்கனையுமான “குல் பனாக்” ஃபார்முலா E கார் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பாலிவுட் நடிகையான குல் பனாக் திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் பந்தய வீராங்கனை மற்றும் விமானி என பல்துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில்ஃபார்முலா E கார் பந்தய போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்துகொள்ள குன் பனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இக்கார் பந்தய போட்டியில் கலந்துகொள்ள தானும் ஒருவராக தேர்வானது மகிழ்ச்சியளிப்பதாக குல் பனாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முதல் பெண்ணாக இவர் இப்போட்டியில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க