• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

October 13, 2021 தண்டோரா குழு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், இன்று ரிப்பன் வெட்டி துவங்கி வைத்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில், செயல்பட்டு வருகின்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர்காக்கும் உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்,

பாஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக, நோயாளிகளுக்கான மானிட்டர், வென்டிலேட்டர், சரிஞ்ச்பம்ப், என்ஐவி வென்டிலேட்டர்கள், நிறுவப்பட்டுள்ளது இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்தையும் துவக்கிவைத்து நோயாளிகளின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ் என் ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுகுமாரன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், பாஸ் நிருவன கார் மல்டிமீடியா பொது மேலாளர் ஷைஜூ, மற்றும் அறம் அறக்கட்டளை நிறுவனர் லதாசுந்தரம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க