• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர நெஞ்சு வலியால் உயிரிழப்பு

April 3, 2026 தண்டோரா குழு

கோவை பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் மலைப்பாதையில், மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பீடம்நேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார் (23),கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு பயின்று வந்தார்.தெலுங்குபாளையம் பகுதியில் வாடகைக்குத் தங்கி கல்வி பயின்று வந்த அவர்,தனது நண்பர்களுடன் நேற்று இரவு வெள்ளிங்கிரி மலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.
​நேற்று இரவு சுமார் 10.00 மணி அளவில், அபி மற்றும் மகேந்திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் மலையேறத் தொடங்கிய முகேஷ் குமார்,இன்று அதிகாலை 02.00 மணி அளவில் ஐந்தாவது மலைப் பகுதியை எட்டிய போது திடீரென நெஞ்சு வலியால் துடித்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்த நிலையில்,அங்கு இருந்த நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத சூழலில்,அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த கோயில் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர், டோலி தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் உயிரிழந்த முகேஷ் குமாரின் உடலை மீட்டு, மலைப் பாதையில் இருந்து கீழே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தச் சம்பவம் மலையேற்றப் பிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க