• Download mobile app
10 Dec 2023, SundayEdition - 2860
FLASH NEWS
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் சார்பில் “ப்ராஜெக்ட் விண்வெளி” !

August 12, 2023 தண்டோரா குழு

ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் சார்பில் கோவை துடியலூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் “ப்ராஜெக்ட் விண்வெளி” குறித்த தொலைநோக்கி (telescope) செய்முறை பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது.

இதில், 6 முதல் 8 வரை பயிலும் மாணவ மாணவியர் தாங்கள் உருவாக்கிய தொலை நோக்கிகளை சோதனை செய்து பார்த்தனர்.

இது குறித்து ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் கிளப்பின் தலைவர் ரோட்டரியன் ரேஷ்மா ரமேஷ் கூறுகையில்,

எங்கள் கிளப்பின் சார்பில் 2022 துடியலூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் தொலைநோக்கி கருவிகள் கொடுத்தோம். இதை அடுத்த கட்டமாக எடுத்து செல்லும் விதமாக துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளை சேர்ந்த 24 அரசு பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து புராஜக்ட் விண்வெளி என்ற பெயரில் 2 நாட்கள் பயிற்சி பட்டறை
நடத்தினோம்.இதில் 90 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.3.5.லட்சம் செலவில் தொலைநோக்கிகளை வாங்கி கொடுத்தோம்.ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் அமைப்பு மாணவர்களுக்கு தொலைநோக்கி கருவிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து தொழில்நுட்ப ரீதியாக வகுப்பு நடத்தினர்.

கனடாவில் ரோட்டரியன் வித்தியா நடராஜன் இதற்கான தொகையை வழங்க முக்கிய காரணமாக இருந்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளை பலர் எங்கள் கிளப்பில் உறுப்பினராக உள்ளனர். இதனால், இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் உள்ள அரசு மாணவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம். அதற்கான முயற்சி செய்து வருகிறோம்.

இன்று நடைபெற்ற நிறைவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிராந்தி குமார் பாடி, ஆசிரியர் சித்ரா, மாவட்ட கல்வி அலுவலர் புனிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க