• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்வைப்பு தொகை விரைவாக வழங்க மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

December 30, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அவிநாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் நடந்தது.இதில் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன்0 துணைச் செயலாளர் மைக்கேல், கொசினா செயலாளர் சேகர் மற்றும் சங்கத்தினர்
கலந்து கொண்டனர்.

ஒப்பந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பில் தொகை வழங்காமல் நிலுவை அதிகமாக வைத்துள்ளது.5 சதவீதம் பிடித்தம் செய்த தொகையையும் பல ஆண்டுகள் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.இதை விரைவாக வழங்க மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பில் தொகை நிலுவை மற்றும் 5 சதவீத பிடித்தம் செய்த தொகை விரைவாக வழங்க மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்படும்.மாநகராட்சியில் பிடித்தம் செய்த 2 சதவீத ஜிஎஸ்டி தொகையை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் ஜிஎஸ்டி அக்கவுண்டில் கட்ட வழிவகை செய்ய வேண்டும்.டென்டர்களில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்களின் எல் 2 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் 1 சதவீத முன்வைப்பு தொகையை (இஎம்டி) சி பிரிவு ஒப்புதல் முடிந்ததும் திரும்ப வழங்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் சங்க உறுப்பினர்கள் சின்னப்பன், பால்ராஜ், கார்த்திகேயன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு 2024ம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரி வழங்கப்பட்டது.
காவேரி பைப்ஸ் நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் மரக்கன்றுகள் வழங்கினார்.

வரும் ஜனவரி 7ம் தேதி சங்கத்தின் 28 ஆம் ஆண்டு விழா பீளமேடு கொடிசியா அரங்கத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

மேலும் படிக்க