• Download mobile app
10 Dec 2023, SundayEdition - 2860
FLASH NEWS
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முத்து ராஜாவிற்கு கங்கா மருத்துவமனை மற்றும் கோவை மத்திய ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு விழா

November 8, 2023 தண்டோரா குழு

முதுகு தண்டுவடக் காயத்துக்காக கோவை கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு பெற்ற முத்து ராஜா ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை புரிந்தார். இவருக்கு கங்கா மருத்துவமனை மற்றும் கோவை மத்திய ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

பணியின்போது,மிகவும் உயரத்தில் இருந்து முத்துராஜா கீழே விழுந்தார்.இதனால் அவருக்கு இடுப்பு மற்றும் முதுகு தண்டுவடத்தில் தீவிர காயம் ஏற்பட்டது. அவரின் உடலின் இயக்கம் முற்றிலும் தடைபட்டது. கங்கா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, கங்கா முதுகுதண்டுவட காய சிகிச்சை மையத்திலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல் இயக்கமே இல்லாமல் இருந்த இவர், தொடர் சிகிச்சையால் வீல்சேரில் அமர்ந்து, தனது வேலையை செய்யும் அளவிற்கு உடல்நிலை முன்னேறியது.தொடர்ந்து, தனது உடல் முடங்கினாலும், தனது லட்சியப் பாதையில் அவர் தொடர்ந்து பயணித்தார். பிசியோதெரபி நிபுணர் முருக பிரபு மற்றும் பயிற்சியாளர் யுவராஜ் உதவியுடன் ஷாட் புட் விளையாட்டில் பயிற்சி பெற்றார்.

கோவை மத்திய ரோட்டரி கிளப் மற்றும் கங்கா மருத்துவமனை உதவியுடன் இவர் ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.இவரின் அபார திறமையாலும், விடா முயற்சியாலும் இவர் ஆசியன் பாரா ஷாட் புட் விளையாட்டு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜ சேகரன் கூறியதாவது:

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதற்கு முத்துராஜாவின் கதை ஓர் உதாரணம். முதுகுத் தண்டுவடத்தில் காயம் உள்ள நோயாளிகள், தங்களின் முழுத் திறனுடன் செயல்பட இத்தகைய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டால், முதலில் ஒரு நிலையான மற்றும் உறுதியான முதுகுத்தண்டு கொடுக்க, ஒரு ஆரம்ப மற்றும் உறுதியான அறுவை சிகிச்சை மிகவும் முக்கியமானது.

இது மிக விரைவாக மறுவாழ்வு தொடங்க உதவும். முத்துராஜாவுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், பல டைட்டானியம் திருகுகள் பயன்படுத்தப்பட்டு,முதுகுத் தண்டுவடம் நிலைநிறுத்தப்பட்டது.இல்லையெனில், முதுகெலும்பு எப்பொழுதும் பலவீனமாக இருக்கும்.கங்கா மருத்துவமனையில், முதுகுத் தண்டுவடத்தில் காயம் உள்ள நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை வழங்குகிறது.முத்துராஜாவின் சாதனை, எங்கள் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி.” என்றார்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, முத்துராஜா கங்கா முதுகெலும்பு காயம் மறுவாழ்வு மையத்தில் மறுவாழ்வு பெற்றார். இந்த மையத்தில் அதிநவீன விலையுயர்ந்த இயந்திரங்கள் உட்பட பல மேம்பட்ட உபகரணங்கள் உள்ளன. இந்த மையம், கோயம்புத்தூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் மூலம் ரோட்டரி இன்டர்நேஷனலின் இரண்டு உலகளாவிய மானிய திட்டங்களின் பயனாளியாக உள்ளது.இங்கு மேற்கத்திய நாடுகளில் வழங்கப்படும் அதிநவீன சிகிச்சைகளுக்கு இணையான மிகவும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கங்கா மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் ஆகியவை சார்பில் முத்துராஜாவுக்கும். அவரது பயிற்சியாளர் யுவராஜுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில் கோயம்புத்தூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் அஷ்வின் வரவேற்றார்.முன்னணி கட்டிடக் கலை நிபுணரும், ரோட்டரி சென்ட்ரலின் உறுப்பினருமான ரமணி சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.கங்கா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜசேகரன், முதுகுத் தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, முத்துராஜாவின் கதை இதுபோன்ற பல நோயாளிகளுக்கு உத்வேகமாக உள்ளது என்றார்.

மேலும், அவர் பேசுகையில்,

முத்துராஜாக்களை உருவாகும் வகையில், புனர்வாழ்வு மையத்தை பாராலிம்பிக் விளையாட்டுப் பயிற்சி மையமாக விரிவுபடுத்துவதற்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் விளக்கினார்.

மேலும் படிக்க