• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்க விழா, சிஆர்எஸ் விருது விழா – ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது

March 30, 2023 தண்டோரா குழு

கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்கள் மற்றும்சிஆர்எஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக ராக் அமைப்புடன் இணைந்து மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்கவிழா மற்றும் சிஆர்எஸ் விருது இன்ஸ்டிட்யூசன் பில்டர் (Institution builder) வழங்கும் விழா வரும் ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் இந்த அமைப்புகளின் நிறுவனர்கள், தலைவர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்கள் சி.ஆர்எஸ் நினைவு அறக்கட்டளை குழு மற்றும் ராக் அமைப்பு இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. மறைந்த சிஆர் சுவாமிநாதன் கனவை நினைவாக்கும் வகையில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டம் தொடங்கப்படுகிறது. அவரது நினைவை கௌரவிக்கும் வகையில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிஆர் சுவாமிநாதன் பல ஆண்டுகளாக ஏழை மாணவர்களின் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு அவர்கள் கல்விக்காக தொடர்ந்து உதவிகள் செய்து வந்துள்ளார். பள்ளி கல்வி முதல் முதுநிலை கல்லூரி கல்வி வரையிலான நீண்டகால கல்வி உதவித் தொகை மற்றும் வழிகாட்டி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் துவக்கவிழா ஏப்ரல் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில்
அமைந்திருக்கும் மணி உயர்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இவ்வருடம் இத்திட்டத்தின் கீழ் 5 மாணவர்கள் பயனாளிகளாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுநிலை படிப்பு வரை கல்வி
உதவி தொகை அளிக்கப்படும். அதுமட்டுமல்லாது அவர்கள் தொடர்ந்து சிறப்பாக படித்திட உதவியாகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் ஒவ்வொரு மாணவருக்கும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒரு வழிகாட்டியும்உடனிருந்து நல்வழிகாட்டுவார்.

இந்த கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் 25 க்கும் மேற்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வாடகை வீடு, விட்டு உபயோக சாதனங்கள் முதலான எந்த அடிப்படை வசதிகளுமற்ற குடிசை வீடுகளில் வசிக்கும் மாணவர்கள், உடல் ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள்,பெற்றோர்கள் இல்லாத
மற்றும் ஒரு பெற்றோர்மட்டுமே உள்ள மாணவர்கள் என்று பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கல்வி உதவி பெறும்
மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரிகால் நிறுவனத்தின் நிறுவனரும் விழா முதன்மை விருந்தினருமான விஜய்மோகன் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவார்.

விழாவின் போது மற்றுமொரு இணைநிகழ்வாக சிறந்த நிறுவன உருவாக்கத்திற்கான சிஆர்எஸ் விருது இன்ஸ்டிட்யூசன் பில்டர், சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புக்கு வழங்கப்படுகிறது.கோவையில் தொழில்துறை வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் சிறப்பாக பங்களித்த முன்னோடிகளில்ஒருவரான சிஆர் சுவாமிநாதனை கௌரவிக்கும் வகையில் சிஆர்எஸ் விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

இந்த நிகழ்வில் ராக் அமைப்பின் நிறுவனர் சவுந்தர்ராஜன், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை உறுப்பினர் சுந்தர்ராமன், கொடிசியா தலைவர் திருஞானம், ராக் அமைப்பின் தலைவர் ஆர்.ஆர்.பலாசுந்தரம், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை திட்ட தலைவர் ஏ.வி. வரதராஜன்சீமா தலைவர் விக்னேஷ், சிட்டாரக் தலைவர் செந்தில்குமார், டிகா தலைவர் பிரதீப், ராக் செயலாளர் ரவீந்திரன், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை செயலாளர் விஸ்வநாதன், ஐ.ஐ.எப். எஸ்.ஆர். தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க