• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் வாழ்த்து

May 8, 2026 தண்டோரா குழு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விப் பயணத்தை தொடங்கவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உழைப்பும், விடாமுயற்சியும் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறைகளை தேர்வு செய்து நாட்டின் வளர்ச்சிக்கான தூண்களாக உருவாக வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாத மாணவர்கள் மனம் தளராமல் எதிர்கால வாய்ப்புகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க