• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பழங்குடியின பெண்கள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் ஸ்மார்ட் டைலர் திட்டம் துவக்கம்

December 19, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் காரமடை தோலம்பாளையத்தில், “ஸ்மார்ட் டைலர்” திட்டத்தை இன்று (2023 டிசம்பர் 19ஆம் தேதி) செவ்வாய் அன்று துவக்கியது.

ரோட்டரி இன்டர்நேஷனல் ஆர்ஐடி 3201 சார்பில் “ஸ்மைல்” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், பழங்குடியின பெண்கள் பயன்பெறும் வகையில் தொழில் பயிற்சியை அளித்து வருகிறது. இதில் 50 பழங்குடியின பெண்கள் டெய்லரிங் பயிற்சி பெற்று, புதிய தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொண்டு, சுயசார்பு வாழ்க்கைக்கும் வேலைக்கும் பயிற்சி பெறுவர்.

இந்தப் பயிற்சி மையத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ளார் 20 டைலரிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள இதில் பயிற்சிகள் தரப்படுகிறது. இதற்கான பயிற்சி கட்டணமாக மாதந்தோறும் 8000 ரூபாய் வீதம் 96000 ரூபாயை கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் செலுத்துகிறது.

திட்ட துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ஆர் ஐ டி 3201 மாவட்ட இயக்குனர் எஸ் கோகுல்ராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார்.
கௌரவ விருந்தினராக துணை கவர்னர் வெங்கட் பங்கேற்றார். ரோட்டரி கிளப் தலைவர் ரோகிணி சர்மா, செயலாளர் முர்துஸா ராஜா ஆகியோர் இந்தத் திட்டத்தை, மாவட்ட முன்னோடி திட்ட தலைவர் ராஜேஷ் நந்தா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்துவர். சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் டாக்டர் மீரா தலைமையிலான அணி செயல்படுத்துகிறது.

திட்ட துவக்கத்தின் போது ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட்சிட்டி உறுப்பினர்கள் ரோட்டேரியன் ஜெயஸ்ரீ கோட்டா, ரோட்டேரியன். ஸ்வேதா குப்தா, ரோட்டேரியன். ரஷிதா ராஜா மற்றும் ரோட்டேரியன் சுஜா அருண், தோலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா செந்தில், வார்டு மெம்பர் ராணி, சிறுவானி அமைப்பின் இயக்குனர் டாக்டர். மீரா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க