• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் எம். பிக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

June 5, 2024 தண்டோரா குழு

நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நிறைவுபெற்று மீண்டும் மோடி அரசே மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.

மக்களவை / மாநிலங்களவை !

இந்தியாவில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். நாடாளுமன்றத்தை பொறுத்தவரை லோக்சபா,ராஜ்யசபா என 2 சபைகள் உள்ளன.இவர்களில் ராஜ்யசபா எம்பிக்கள் என்பவர்கள் கட்சியின் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டு.மாறாக லோக்சபா எம்பிக்கள் என்பவர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகள் ஆகும்.

எம்பிக்கள் சம்பளம்?

நாம் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுத்து அனுப்பும் எம்.பிக்களின் சம்பளம்? சலுகைகள் என்னென்ன? என்று நினைத்து பார்த்திருக்கிறோமா?

எம்பிக்களுக்கு மாத அடிப்படை சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.கூடுதலாக, அவர்களின் சம்பளம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அதிகரிக்கும். அடிப்படை ஊதியம் உயராமல் அவர்களின் கொடுப்பனவுகள் (Allowances) உயரும்.

மேலும்,நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் பட்சத்தில் உறுப்பினர்களுக்கு தினமும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையாக கொடுக்கப்படும். உறுப்பினர்கள் சாலை மார்க்கமாக பயணிக்கும்பட்சத்தில் ஒரு கிலோ மீட்டர் 16 ரூபாய் என்ற ரீதியில் அவர்களுக்கு பயணப்படி வழங்கப்படும்.தொகுதி சார்ந்த நிதி ஒதுக்கீடாக மாதம் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு அலுவலக செலவாக மாதம் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.இதில் பேப்பர், பேனா போன்ற ஸ்டேஷ்னரி செலவுகளுக்கும், தபால் செலவுகளுக்கும் 15 ஆயிரம் இதில் ஒதுக்கப்படும்.இந்த கொடுப்பனவை அலுவலக உதவியாளர்களின் ஊதியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.உறுப்பினர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ சேவையைப் பெற ஒவ்வொரு மாதமும்,500 ரூபாய் பெறுவார்கள்.கூட்டங்களுக்குச் செல்வது உட்பட தங்கள் தொகுதிகளை பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் செலவுகளை விண்ணப்பித்து அதனை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.உறுப்பினர்கள் தங்களுடைய முழு பதவிக்காலத்திலும் வாடகையில்லா வீட்டு வசதியைப் பெறுவார்கள்.

ஒவ்வொரு எம்பியும் வருடத்திற்கு 34 முறை விமான பயணமாக இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் போய் வர முடியும்.இதற்கு ஆண்டுதோறும் ஆகும் செலவு தோராயமாக ரூ.5 லட்சமாகும்.அதேசமயம்,ரயில் பயணம் முழுக்க முழுக்க இலவசம்.எத்தனை வாட்டி வேண்டுமானாலும் ரயிலில் போயக் கொள்ளலாம்.

ஒருவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவருக்கு வாழ்க்கை முழுவதும் பென்ஷனும் கிடைத்து விடும்.முன்பு இத்தனை காலம் எம்.பியாக இருக்க வேண்டும் என கட்டுப்பாடு இருந்தது. இப்போது அது இல்லை. எம்.பி. ஆகி விட்டாலே பென்ஷன், கன்பர்ம்ட்.

மேலும் படிக்க