• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித்தேர்தலிலும் தொடரும் – முதல்வர் பழனிச்சாமி

November 11, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித்தேர்தலிலும் தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது. அமமுக புகழேந்தி அதிமுகவில் இணைய கடிதம் கொடுத்தால், தலைமை கழகம் பரிசீலித்து முடிவெடுக்கும். உள்ளாட்சித்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பு என்றும் உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் குறித்த காலத்தில் தேர்தலை அறிவிப்பார்கள் என நம்புகிறோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித்தேர்தலிலும் தொடரும் என்றார்.

தமிழகத்தில் வெற்றிடம் தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் ஒரு நடிகர். அரசியல் தலைவர் அல்ல. விறுவிறுப்பான செய்தி வேண்டுமென்பதற்காக ரஜினியின் கருத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. சென்னையில் காற்று மாசு இல்லை என்பதை வருவாய் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். தொல்லியல் துறை வசமுள்ள மாமல்லபுரத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுற்றுலா தலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க