• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நல்லது நடக்க வேண்டும் என விரும்புகிற இடத்தில் நான் இருப்பேன் – சிம்பு

March 31, 2017 தண்டோரா குழு

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். இதில் ரஜினி, கமல் ஆகியோர் இணைந்து செங்கலை தொட்டு வணங்கி வைத்தனர்.

விழாவில் மூத்த நடிகர்கள் சிவக்குமார், விஜயக்குமார் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் தற்போது தலைமையில் இருக்கும் அணிக்கு எதிராக தேர்தலின்போது பல கருத்துக்களை முன்வைத்து துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு இவ்விழாவில் கலந்து கொண்டது தான்.

விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய சிம்பு ” இங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலும் எங்கள் கடின உழைப்பின் அடையாளம். நல்லது நடக்க வேண்டும் என விரும்புகிற இடத்தில் நான் இருப்பேன்” என விளக்கமும் அளித்துள்ளார்.

மேலும் படிக்க