• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தலை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

April 5, 2021 தண்டோரா குழு

கோவை மாநகரில் சட்டமன்ற தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் மூன்று இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று நடந்து சென்றனர்.

சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை சார்பில் 3 இடங்களில் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது.தேர்தலை அமைதியாக நடத்தவும், தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டது.

கோவை வின்சன்ட் ரோட்டில் இருந்து உக்கடம் காவல் நிலையம் வரை ஒரு அணிவகுப்பும், மரக்கடை பகுதியிலிருந்து ஆர்எஸ் புரம் காவல் நிலையம் வரை ஒரு அணிவகுப்பும், டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து ரத்தினபுரி பகுதி வரை ஓரு அணிவகுப்பும் என 3 இடங்களில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

கோவை மாநகர காவல் துறையினருடன் எல்லை பாதுகாப்பு படை,மத்திய தொழில் பாதுகாப்பு படை, சி.ஆர்பி.எப் மற்றும் ஊர்காவல் படையினர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். போலீசார் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி பேன்டு வாத்தியங்கள் முழங்க இந்த கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு கொடி அணிவகுப்பிலும் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

மேலும் படிக்க