• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திறமையான எழுத்தாளர்களுக்கு சமூக வலைதளங்கள் நல்ல களம் அமைத்து கொடுக்கப்படுகிறது – விஜயகார்த்திகேயன்

July 11, 2019 தண்டோரா குழு

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனருமான விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரும், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனருமான கார்த்திகேயன் எழுதிய “ஹார்ட் குவேக்” என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. கோவையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐ. ஏ.எஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மருத்துவ த்ரில்லர் கதை பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்புத்தகத்தை கார்த்திகேயன் வெளியிட காயத்ரி கிருஷ்ணன் மற்றும் தனியார் வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் ஆகியோர் பெற்றுகொண்டனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேயன்,

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், திறமையான எழுத்தாளர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் நல்ல களம் அமைத்து கொடுக்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் படிக்க