• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் 100 விபத்துக்கள் ஏற்பட்டால் 26 நபர்கள் இறந்து விடுகின்றனர் – உள்துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா

October 13, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உயிர் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் சாலைப் பாதுகாப்பை கற்போம் பகிர்வோம் குறித்த ஆசிரியர் கையேட்டினை உள்துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி, துணை தலைவர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் உள்துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா தெரிவித்ததாவது-

குழந்தைகளின் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குட்டி காவலன் என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு பல்வேறு செயல்களில் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் விபத்து ஏற்படுவதிலும் முதன்மையாக திகழ்வது வருத்தம் அளிக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 100 விபத்துக்கள் ஏற்பட்டால் 26 நபர்கள் இறந்து விடுகின்றனர்.

கோவையை பொறுத்தவரை 100 விபத்துக்கள் ஏற்பட்டால் 30 நபர்கள் இறந்து விடுகின்றனர். இந்த விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காக உயிர் அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், கூடுதல் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி விபத்துக்களினால் ஏற்படும் இறப்புகளை குறைக்கவேண்டும். பள்ளிக்குழந்தைகளை பொறுப்புள்ளவர்களாகவும், சமூக அக்கறை உள்ளவர்களாகவும் மாற்ற இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கான காரணம் இருசக்கர வாகனங்கள் தான். 30 சதவீதம் விபத்துக்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதினால் ஏற்படுகின்றது. தலைக்கவசம் இருந்தும், உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் தலைக்கவசம் அணியாமல் இருப்பது தவறாகும். சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட்பெல்ட்டும் கட்டாயம் அணிய வேண்டும். மேலும், வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது, அதிக வேகமாக செல்லாமல் இருப்பது, நேரத்திற்கு புறப்படுதல் போன்றவற்றின் மூலம் விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சொல்லும், செயலும் ஒன்றாக இருந்தால் குழந்தைகள் அதனை தாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். சொல்பவர்கள் அதனை முன்மாதிரியாக இருந்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர்கள் இதனை கடைபிடித்தால்தான் இதனை பார்க்கும் குழந்தைகளும் வருங்காலங்களில் முறையாக பின்பற்றும். எனவே, இக்கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து தங்களது பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அக்குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

நான் குட்டி காவலன் இத்திட்டத்தின் முன்னேற்றத்திற்கு முதன்மையாக இருக்கும் பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரையும் பாராட்டுகிறேன். இவர் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க