• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் அளித்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள்

August 30, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை பொதுமக்கள் சார்பாக கோயம்புத்தூர் மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரனிடம் நேற்று புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அம்மனுவில் காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை சந்திக்கும் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை நீர் சாக்கடை வடிகால் வாயிலாக செல்லாமல் தெருக்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் செல்வதாகவும் சம்பந்தப்பட்ட இந்தப் பகுதியில் இரண்டு மழலையர் பள்ளி மருத்துவமனை மற்றும் 95 சதவீதம் குடியிருப்பு பகுதியாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பெரும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மேலும் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகளால் நடந்து செல்பவர்கள் மீது சாக்கடை தண்ணீர் தெளிக்கப்பட்டு நடந்து செல்பவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,இன்று காலையிலேயே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடையை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க