• Download mobile app
01 Dec 2024, SundayEdition - 3217
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் கோவையில் சர்வதேச செஸ் தொடர் போட்டிகள் !

November 30, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் கோவையில் சர்வதேச செஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

ஒரு செஸ் விளையாட்டு வீரர் சர்வதேச செஸ் மாஸ்டராக வேண்டும் என்றால் அவர் குறைந்தது 3 சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். பல்வேறு பகுதிகளுக்கும் சென்று லட்சக்கணக்கில் பணம் செலவழித்து இத்தகைய போட்டிகளில் பங்கேற்க முடியாத தகுதி வாய்ந்த செஸ் விரர்களுக்காக தமிழ்நாடு செஸ் சங்கத்தினர் சர்வதேச செஸ் தொடர் போட்டிகளை ஒருங்கிணைத்துள்ளது.

இந்த போட்டிகள் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வீரர்கள், வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு செஸ் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செஸ் வீரர் விராங்கணைகள் நார்ம் புள்ளிகளை பெற லட்சக்கணக்கில் செலவு செய்து வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று செஸ் போட்டிகளில் கலந்து கொள்ளவும் சூழல் இருந்து வந்த நிலையில்,தமிழ்நாடு செஸ் கழகம் சார்பில் இந்த போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.முன்னதாக ஆண்டுக்கு ஒரு சிலர் மட்டுமே செஸ் மாஸ்டராக வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 10 முதல் 20 பேர் வரை செஸ் மாஸ்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது.இதற்காக தமிழக அரசு மேற்கொண்ட விளம்பரங்கள் மூலம் தமிழகத்தில் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.மேலும், போட்டி நடைபெறும் போது சிறந்த வீரர்களை தமிழக அரசு அழைத்துச் சென்று அவர்களை போட்டிகளை காண வைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு செஸ் சங்கத்தின் துணை தலைவர் அனந்தராம், இணைச் செயலர் பிரகதீஸ்வரன், கோவை மாவட்ட செஸ் சங்கத்தின் செயலாளர் தனசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க