• Download mobile app
15 Jun 2024, SaturdayEdition - 3048
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிரினிட்டி கண் மருத்துவமனை சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

November 14, 2023 தண்டோரா குழு

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ். புரம் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்று துவங்கியது. முகாமை கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து இணை ஆணையாளர் ராஜராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.

இது குறித்து டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன் கூறியதாவது :-

கேரளாவில் புகழ்பெற்ற டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை. கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு, திருச்சூர், ஆலத்தூர், திரூர் மற்றும் நெம்மாரா ஆகிய இடங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளது.தமிழகத்தில் தனது முதல் கிளையை கோவையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஆர்.எஸ். புரம், டி.பி. ரோட்டில் (தபால் அலுவலகம் அருகே) துவக்கியது. கோவை மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மூலம் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்கு சேவையாற்றும் விதமாக பல சேவைகளை செய்து வருகின்றோம்.

இதன் ஒரு பகுதியாக இன்று நவம்பர் 14 – ம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ். புரம் டிரினிட்டி கண் மருத்துவமனை சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் துவக்கியுள்ளது.தமிழ்நாட்டில் 14 சதவீதம் அதாவது 100-க்கு 14 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்கள் தான். இந்த பாதிப்பு வெளியில் ஓரளவு தெரியும் உடனே கண் பரிசோதனை மூலம் அதை சரி செய்து கொள்ள முடியும். இதற்காக இப்போது எங்கள் மருத்துவமனையில் ஓட்டுநர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை பரிசோதனைகளை 10 நாட்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் 1500 ரூபாய் முதல் 2000 வரை கட்டணமாக செய்யக்கூடிய இந்த பரிசோதனைகளை இலவசமாக செய்கிறோம். இன்று முதல் வரும் 10 நாட்களுக்கு தினமும் 100 ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த 2023 ஆண்டுக்கான கருத்தாக்கமாக நீரிழிவு பராமரிப்புக்கான அணுகல் உள்ளது.
நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படும், இன்சுலினை கண்டுபிடித்த பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்கால மக்களிடையே அதிகம் பேசப்படும் ஒரு நோய், நீரிழிவு நோய். முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இந்த சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்டவர் வைத்திருக்கமுடியும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப் பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது. அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கண்டறியப்பட்டது.

சர்வதேச ரீதியில் இந்த நீரிழிவு நோய் குறித்த பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இன்றைய தலைமுறையில், வயது வித்தியாசம், பார்க்காமல் அனைத்து தரப்பினரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோய் என்பதை பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80 சதம் பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து இணை ஆணையாளர் ராஜராஜன் துவக்கிவைத்து பேசும் போது :-

கோவை சுந்தராபுரம் பக்குதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சாலையை கடக்க முயன்றவரின் மீது வாகனம் மோதி ஒருவர் உயிர் இழந்ததை தொடந்து காவல் துறை விசாரணையின் போது வாகன ஒட்டிக்கு கண் பார்வை குறைபாடு உள்ளதை கண்டுபிடித்தோம். இதுவே சாலை விபத்திற்கு காரணம் ஆகும்.ஆகவே வாகன ஒட்டுனர்கள் ஆண்டிற்கு ஒரு முறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்ய வேண்டும். இது அவர்களை மட்டுமின்றி பயணிகளையும் பாதுகாக்கும். நாம் நன்றாக இருக்கின்றோம். நமது பார்வை நன்றாக உள்ளது என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கின்றோம்.ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் போது தான் நம்மில் 100-க்கு 30 முதல் 40 சதவீதம் பேர் வரை கண் பார்வை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவருகின்றது. பார்வை குறைபாட்டால் நிறைய விபத்துக்கள் ஏற்பட்டு மரணம் ஏற்படுகின்றது. இதனால் அவர்களது குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது.

முன்னதாகவே பரிசோதனை செய்து கொண்டால் உங்களது பார்வை இழப்பை சரிசெய்து கொள்ளலாம். இதனால விபத்துக்கள் குறைய வாய்ப்பு உள்ளது. ஒட்டுனர்களின் மீது அக்கறை கொண்டு சமுக பொறுப்புணர்வுடன் செயல்படும் மருத்துவணைக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையாளர் அருள் முருகன், டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர். முகமது ஷபாஸ், முதுநிலை ஆலோசகர் டாக்டர் மும்தாஜ், டாக்டர். அனுஷா, டாக்டர். விஜயகுமார், தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ மற்றும் மார்கெட்டிங் இணை துணை தலைவர் ரவி குமார், ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் படிக்க