• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ராமகிருஷ்ணா கல்லூரிக்கு தேசிய மாணவர் படை விருது !

November 6, 2023 தண்டோரா குழு

இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர எஸ்.எஸ்.பி எனப்படும் சேவை தேர்வு வாரிய நேர்க்காணலை எதிர்கொள்வது அவசியம். இதனிடையே என்.சி.சி குரூப் கேடர்களாக உள்ள மாணவர்கள் மத்தியில் எஸ்.எஸ்.பி நேர்க்காணலை எதிர்கொள்ளும் பயிலரங்கு கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி கேடர்களாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் என்.சி.சி இயக்குநரகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் கொமடோர் அதுல் குமார் ரஸ்தோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் எஸ்.எஸ்.பி தேர்வு முறை, அதனை எதிர்கொள்ள தேவைப்படும் யுக்திகள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை பயிற்சி, சமூக சேவை, சமுதாய மேம்பாட்டிற்கான செயல்களில் சிறந்து விளங்குவதற்காக இராமகிருஷ்ணா கல்லூரியின் 6வது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி தேசிய பிரிவை பாராட்டி எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி சிவி.ராம் குமாருக்கு தேசிய மாணவர் படையின் கேடயம் கல்லூரி முதல்வர் பி.எல்.சிவகுமாருக்கு விருது ஆகியவை வழங்கப்பட்டன

இது குறித்து அதுல்குமார் ரஸ்தோகி கூறியதாவது:

தமிழ்நாடு என்சிசி இயக்குனரகம் தேசிய அளவில் மதிக்கப்படுகிறது. குறிப்பாக கோயம்புத்தூர் குழுமத்தில் உள்ள கேடர்கள் தேசிய மற்றும் இயக்குனரக அளவில் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள். அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். ஆயுதப்படையில் சேர மக்களை ஊக்குவிப்பது என்.சி.சி-யின் நோக்கங்களில் ஒன்றாகும்.அந்த முயற்சிகள் வெற்றியடைய,செயல்முறைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது முக்கியம். எஸ்.எஸ்.பி தேர்வு முறையில் எனது அனுபவங்கள் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க