• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை துடியலூர் பகுதியில் (GuGu) கூகூ டென்டல் கிளினிக் இரண்டாவது கிளை துவக்கம்

June 9, 2024 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் விஜி மருத்துவமனை அருகே கூகூ பல் மருத்துவமனை இரண்டாவது கிளை இன்று காலை துவங்கப்பட்டது.இதனை வுமன் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் மற்றும் orthodontist ஆர்த்தடான்டிஸ்ட் மருத்துவர் அகிலானந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பல் மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் தாயப்பன் அழகிரிசாமி,ஸ்ரீ சபரி ஜுவல்லர் சபரிநாத்,பல் சிகிச்சை மருத்துவர் சுஜாதா அகிலானந்த், கோட்டாகோல்டு ஜுவல்ஸ் கவிதா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கூகூ பல் மருத்துவமனை தலைமை பல் மருத்துவர் பூர்னேஷ் கண்ணா மற்றும் தலைமை பல் சிகிச்சை மருத்துவர் காயத்ரி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கூகூ பல் மருத்துவமனை ஏழு ஆண்டுகளாக அதிநவீன பல் மருத்துவ வசதிகளுடன் கோவை சாய்பாபா காலனி பகுதியில் செயல்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கட்ட முயற்சியாக துடியலூர் பகுதியில் கூகூ பல் மருத்துவமனையின் இரண்டாவது கிளை இன்று 1600 சதுர அடியில் துவங்கப்பட்டுள்ளது.

கூகூ பல் மருத்துவம், டிஜிட்டல் திரையில் ஸ்கேனிங் செய்தல், நிலையான முழு பல் சீரமைத்தல், சிறப்பு கிரீடங்களுடன் முழு பற்களை சேர்த்தல் மற்றும்
ஒழுங்கற்ற பற்களைச் சரி செய்தல் போன்ற சிகிச்சைகள் சிறந்த மருத்துவர்கள் மூலம் செய்து கொடுக்கப்படுகிறது.

மேலும், மற்ற பல் மருத்துவமனையை விட, லேட்டஸ்ட் எக்ஸ்ரே மற்றும் டிஜிட்டலைஸ்டு ஸ்கிரீனிங் போன்ற அட்வான்ஸ் டெக்னாலஜிஸ் எக்யூப்மெண்ட்ஸ் கொண்ட மருத்துவ உபகரணங்களுடன் வலியுல்லா சிகிச்சை அளித்து வருகிறோம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நைட்ரைஸ் ஆக்சைடு மூலம் வலியுல்லா சிகிச்சையை வழங்கி வருகின்றோம்.

திறப்பு விழா சலுகையாக ஜூலை 31ம் தேதி வரை அட்வான்ஸ் டிஜிட்டல் எக்ஸ்ரே ரூபாய் 200 மதிப்பில் கன்சல்டிங் செய்து கொடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க