• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தாடகம் பகுதியில் குட்டியுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானை

January 14, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மாங்கரை கணவாய் தடாகம் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும் வனப்பகுதியில் இருந்து உணவுக்காகவும் தண்ணீர் தேடியும் நாள்தோறும் யானைகள் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று தாய் மற்றும் குட்டி யானை தடாகம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்குள் புகுந்து வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது. மேலும் வீட்டினுள் சென்ற குட்டியானை அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. அப்போது வீட்டின் உள்ளே இருந்தவர்கள் பாதுகாப்பாக மேலே ஏறியதால் அவர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

தற்போது யானைகளின் வலசை பாதை அதிகரித்துள்ளதால் நாள்தோறும் கிராம பகுதிக்குள் யானைகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், குட்டி மற்றும் தாய் யானை வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உள்ளவர்களை தாக்க முயற்சிப்பதாகவும் வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் வெளியே வரும் யானைகளை அப்படியே வனத்துக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க