• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு காற்றின் தன்மை குறித்து அளவீடு செய்ய காப்புரிமை

May 13, 2023 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் முறையில் காற்றின் தன்மை குறித்து அளவீடு செய்யும் அமைப்பிற்கான காப்புரிமையை மத்திய காப்புரிமை ஒன்றியம் வழங்கியுள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் பயிர்களை தாக்கும் நோய், களை மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முறை தற்சமயம் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆளில்லா விமானத்தில் உள்ள இறக்கையின் மூலம் ஏற்படும் காற்றின் விசையை அளவீடு செய்ய பிரத்யேகமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தனித்துவம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மூலம் ஆளில்லா விமானத்தை பல்வேறு உயரங்களில் மற்றும் எடைகளில் இயக்கி அதன் மூலம் உருவாகும் காற்றின் விசையின் தன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த அமைப்பானது அடிப்பாகம், மேற்புறத்தில் செவ்வக வடிவ குழாய்களுடனும், இரண்டையும் இணைக்கும் வகையில் இரும்பிலான ‘எல்’ வடிவ பட்டைகளை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதியில் தூரத்தை அளவீடு செய்யக கூடிய லேசர் ஒளி கற்றையில் இயங்கக்கூடிய கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆளில்லா விமானம் இயக்கப்படும் உயரத்தை அளக்க முடியும்.

இறக்கைகளில் இருந்து கீழ்நோக்கி வரும் காற்றின் விசையை அளவீடு செய்ய 0.00மிமீ, 500 மிமீ, 1,000 மிமீ, 1,500 மிமீ மற்றும் 2,000 மிமீ இடைவெளிகளில், காற்று வேக அளவி பொருத்த சதுர வடிவ குழாய் சட்டகத்தின் நடுவே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த குழாய் சட்டகத்தை சுற்றி வருமாறு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் மூலம் ஆளில்லா விமானத்தின் இறக்கைகளில் இருந்து கீழ்நோக்கி வரும் காற்றின் வேகம் அதன் பரவும் தன்மை ஆகியவற்றை அளவீடு செய்து அதற்கு ஏற்றார்போல் இணைப்புக் கருவிகளை வடிமைக்க பயன்படுத்தலாம். பல்கலைக்கழகத்தின் இந்த காற்றின் தன்மை குறித்து அளவீடு செய்யும் அமைப்பிற்கு காப்புரிமையை மத்திய காப்புரிமை ஒன்றியம் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க