• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரண்டு மாதத்திற்கு பின் நடந்த முதல் திருமணம் !

May 25, 2020 தண்டோரா குழு

கோவை தேவாலயத்தில் ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் முககவசம்,அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடித்து கிறிஸ்துவ திருமணம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றன.இதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவலாயத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திருமணம் நடைபெற்றது. ஆலன் மில்ட்டன், மார்க்கிரேட் ஜெசிந்தா ஆகியோருக்கு அத்தேவலாயத்தின் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் திருமணம் செய்து வைத்தார்.மணமக்கள் மற்றும் திருமணத்தில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்தபடி திருமணத்தில் பங்கேற்றனர்.

IMG-20200525-WA0096

பிரார்த்தனை பாடல் இசைக்கப்பட்ட போது, திருமணத்தில் பங்கேற்றவர்கள் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே, திருமணத்தில் பங்கேற்றவர்கள் தேவலாயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.இதில் பங்கேற்றவர்கள் மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மேலும் படிக்க