• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி !

July 16, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை போத்தனூர், சூலூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸாருக்கு தொற்று உறுதியாகி மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உக்கடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் காய்ச்சல் இருந்துள்ளது இதனால் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்ற இடத்தில் அவருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்.நேற்று இரவு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து கோவை கொடிசியாவில் உள்ள கொரானா சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடன் பணிபுரிந்த மற்ற காவலர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகிறது.இதனால் கோவை உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உக்கடம் காவல் நிலையம் தற்காலிகமாக கோவை வின்சென் ரோட்டில் உள்ள நல்லாயன் சமூக கூடத்தில் செயல்பட ஆயத்தபணிகள் நடந்து வருகிறது.

மேலும் படிக்க