• Download mobile app
18 Sep 2024, WednesdayEdition - 3143
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 1 லட்சம் மக்களுடன் தியானம் நிகழ்ச்சி குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்கின்றார்

February 21, 2024 தண்டோரா குழு

‘வாழும் கலை அமைப்பு சார்பில் வரும் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா மைதானம் மற்றும் வளாகத்தில் தியானம் மற்றும் மகா ருத்ர பூஜை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் வாழும் கலை அமைப்பு ஏற்படுத்தி கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் “போதை பொருள் இல்லாத இந்தியா” என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி கோவை கொடிசியா அரங்கு மற்றும் மைதானத்தில் மார்ச் 2 மற்றும் 3ம் தேதி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியானது தியானத்தின் மூலம் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த மனநிலை மாற்றத்தை பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.இந்நிகழ்வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் இணைந்து தியானத்தில் ஈடுபடுவார்கள்.

கூட்டு தியானம் அனைவரின் மனதையும் அமைதியான நிலைக்கும் எடுத்து செல்லவும், ஆக்கபூர்வமான செயல்களை புதுமையுடன் செய்யவும் வழிவகுக்கும் என குரு தேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகிறார்.

முதலாவதாக மார்ச் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடிசியா மைதானத்தில் மாபெரும் தியான நிகழ்ச்சி நடைபெறும். அதற்கு அடுத்த நாள் (மார்ச் 3ல்) காலை 9 மணிக்கு கொடிசியா வர்த்தக வளாகத்தில் உள்ள D ஹாலில் மகா ருத்ர பூஜை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேலும் படிக்க