• Download mobile app
01 Dec 2024, SundayEdition - 3217
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவு திருவிழா – ஆடல், பாடல், ஃபேசன் சோ நிகழ்சிகளால் கவரப்பட்ட பொதுமக்கள்

May 13, 2024 தண்டோரா குழு

கோவை பாலக்காடு புறவழிச்சாலையில் இயங்கி வருகின்ற ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், “கிச்சன் கார்னிவல் 2024” “பஞ்சாபி உணவுத் திருவிழா” என்ற பெயரில் பொது மக்களுக்கான உணவுத் திருவிழா நடைபெற்றது.

கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே.,கலை அறிவியல் கல்லுாரியின் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் உணவக மேலாண்மைத்துறை சார்பாக ,ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுகளின் பாரம்பரிய சிறப்பை எடுத்து காட்டும் விதமாக கிச்சன் கார்னிவல் எனும் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டிற்கான கிச்சன் கார்னிவல் உணவு திருவிழா ஓயே பஞ்சாபி உணவுத்திருவிழா’ எனும் தலைப்பில் நடைபெற்றது.

முன்னதாக இதன் துவக்க விழாவில், ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரியின் செயலர், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கன்வீனர் கமிட்டி குழு உறுப்பினர், பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன் குத்துவிளக்கேற்றி உணவுத் திருவிழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன்,கோவை ரெசிடென்சி டவர்ஸ் இயக்குனர்,சார்லஸ்ஃபேபியன் ராடிசன் ப்ளு தலைமை சமையல் கலை நிபுணர் பால் நவின் சந்தர்,ஐடிசி ஹோட்டல் தலைமை சமையல் கலை நிபுணர் கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் ராஜு அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உணவுத்திருவிழாவின் தனிச்சிறப்பு மலரை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியின் செயலர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கன்வீனர் கமிட்டி குழு உறுப்பினர் பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன் வெளியிட்டார்.

இந்த உணவுத் திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தின் 100 வகையான பஞ்சாப் உணவு வகைகள், 20க்கும் மேற்பட்ட சாலட் வகைகளான புளிக்கவைக்கப்பட்ட காய்கறி சாலட், வெங்காயத்துடன் கலந்த கொண்டைக்கடலை சாலட், மிளகாய் தக்காளி சாலட், பேபி கார்ன் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு சாலட், வெங்காயத்துடன் வேகவைத்த வேர்க்கடலை பச்சைமிளகாய், கொத்தமல்லி சாலட் போன்றவையும், பிரதான உணவுக்கு முன் வழங்கப்படும் சைவம் மற்றும் அசைவ சிறு உணவுகளான உருளைக்கிழங்கு தந்தூரி, சேனைக்கிழங்கு கபாப், வறுத்த சிக்கன், அங்காரா சிக்கன், பட்டியாலா தவா மீன் வறுவல் போன்றவையும், பஞ்சாப் மாநிலத்தில் விளைந்த கேரட், முள்ளங்கி, பூண்டு காளிஃபிளவர்,எலுமிச்சை, இஞ்சி, பச்சை மிளகாய்,மாங்காய் போன்ற பொருட்களை வைத்து பஞ்சாபி சமையல் முறையில் தயாரிக்கப்பட்ட விதவிதமான ஊறுகாய் வகைகள்,பஞ்சாப் சமையல் பொருள்களை சேர்த்து அரைத்த சட்னி வகைகளான கொத்தமல்லி சட்னி, தக்காளி சட்னி, நாட்டு பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் சட்னி, பீர்க்கங்காய் சட்னி, பஞ்சாபி கஜர் (கேரட்) கி அச்சார், ஐந்து வகை காய்கறிகளான முள்ளங்கி, பச்சைபட்டாணி, பச்சைமிளகாய், காளிஃபிளவர், கேரட்டுகளை வைத்து தயாரிக்கப்பட்ட அச்சார் (பஞ்ச் மிச்செலி வெஜ் அச்சார்) போன்றவையும், பிரதான பருப்பு வகை குழம்புகளான தால் மக்னி, பஞ்சாபி சாக் கிரேவி,ராஜ்மா மசாலா, அமிர்தசரி சோல் மசாலா, முளைகட்டிய பயிறு வகைகள், பஞ்சாபி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி மற்றும் அசைவ புலாவ்,ரைத்தா வகைகளில் கார பூந்தி ரைத்தா, அண்ணாசிப்பழ ரைத்தா, சைவ மற்றும் அசைவ கிரேவி வகைகள் பஞ்சாபி ஸ்டைல் காளான் கிரேவி, பச்சைப்பட்டாணி கிரேவி, பைகன் (கத்தரிக்காய் கிரேவி) பாலக் சிக்கன் கிரேவி, பஞ்சாபி முறையில் செய்யப்பட்ட மீன் குழம்பு,பட்டர் சிக்கன் மசாலா, பஞ்சாப் பிரசித்திப்பெற்ற ரொட்டி வகைகளான மசாலா ரொட்டி,கடலை மாவு ரொட்டி,உருளைக்கிழங்கு ரொட்டி,பட்டர், நாண், தந்தூரி, சாட் வகைகளான பஞ்சாபி சமோசா, தயிர் வடை,ஆலு டிக்கி, பானி பூரி வகைகள், இனிப்பு வகைகளில் பஞ்சாப் கோதுமை அல்வா, கேரட் மற்றும் பால் சேர்க்கப்பட்ட கஜ்ரேலா, பிர்னி, கீர் இனிப்பு வகைகள், பஞ்சாப் லட்டு வகைகள், ஹாட் ஜிலேபி, குல்பி வகைகள், போலி இனிப்பு ரொட்டி வகைகள், வெல்லம்,வாழைப்பழம் மற்றும் பெருஞ்சீரக விதைகளை வைத்து செய்யப்பட்ட குல்குலா இனிப்பு வகைகள் போன்றவை சுவையுடன் பரிமாறப்பட்டது. ஹாட் ஜிலேபி, குல்பீ , தவா வெஜெடபிள்ஸ், போலி போன்ற உணவுகள் நேரடியாக சமைத்தும் பரிமாறப்பட்டது.

சுவையான உணவுகளை பொதுமக்கள், குழந்தைகள், உணவு ஆர்வலர்கள் 2000 நபர்கள் சுவைத்து உண்டனர். இந்த கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை மாணவர்கள் ஆடை அலங்கார அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகளை பிரதிபலிக்கும் விதமாக ஒய்யார நடைப்போட்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். விடுமுறை நாளில் பொழுது பொக்கும் விதமாக கண்ணுக்கு இனிய அனைவரும் கண்டு களிக்கும் வண்ணம் நடனம், பாட்டு குழந்தைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள் என பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த உணவுத்திருவிழா உணவளிப்பு அறிவியல் மற்றும் உணவக மேலாண்மை துறை மாணவர்களின் சமையல் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஊன்றுக் கோலாகவும் தொழில் முனைவோராக மாற்றும் விதத்திலும் கல்லூரி நிர்வாகம் இத்தகைய சிறப்பான ஏற்பாட்டை திறம்பட அமைத்துக் கொடுத்துள்ளது. கேட்ரிங் படிக்கும் மாணவர்கள் பஞ்சாப் உணவுகளை சமைத்தனர்.

மேலும் படிக்க