• Download mobile app
15 Oct 2025, WednesdayEdition - 3535
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நவம்பர் 30ல் ரசிக்க,ருசிக்க கொங்கு திருமண உணவுத்திருவிழா & கண்காட்சி

November 12, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு கேட்ரிங் சங்கம் சார்பில் கோவையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவுத் திருவிழா & கண்காட்சி நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்ட நிகழ்வு மற்றும் டிக்கெட் வெளியீட்டு நிகழ்வு நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்ட உணவு மற்றும் பிரியாணி வகைகள், பழரசங்கள், 90s மிட்டாய்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இன்றைய தினம் நடைபெற்ற டிக்கெட் வெளியீட்டு விழாவில்ல் சிறப்பு விருந்தினர்களாக தி மேட் செஃப் கவுஷிக், தமிழ்நாடு கேட்ரிங் சங்கத் தலைவர் மாதம்பட்டி நாகராஜ்,அரோமா நிறுவனத்தின் தலைவர் பொன்னுசாமி, குக்வித் கோமாளி நட்சத்திரங்களான புகழ், கேமி, தங்கதுறை ஆகியோர் கலந்து கொண்டு டிக்கெட்களை வெளியிட்டனர்.

கொடிசியாவில் நடைபெற உள்ள உணவு விழாவில், பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 799, குழந்தைகளுக்கு ரூபாய் 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் எனவும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் மை ஷோ மூலமாக மட்டுமே பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க