• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கத்திரி வெயில் இனி தான் ஆரம்பம் !-கோவை வெதர்மேன் சொல்வதென்ன?

April 2, 2024 தண்டோரா குழு

பொதுவாக பிப்ரவரி மாதம் முடிந்தபிறகு மார்ச் மாதத்தில் சம்மர் சீசன் எனப்படும் வெப்பம் மிகுந்த காலம் தொடங்கிவிடும். மார்ச் மாதத்தில் குறிப்பிட்ட அளவு வெப்பம் மட்டுமே காணப்படும்.அதன்பின்னர் படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிக அதிகப்படியான வெப்பம் பதிவாகும்.

அதெல்லாம் ஒரு காலம்பா இப்போ மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் தாங்க முடியல என்கிறார்கள் கோவை மக்கள். அந்த அளவிற்கு கோவையில் கடந்த மார்ச் வெயில் சுட்டெரித்தது.இதன் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதையே மக்கள் சற்று குறைத்து விட்டனர். அந்தளவுக்கு வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது.வீடுகளில் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. சில நேரங்களில் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அதனையும் தாண்டி வெப்பம் தெரிகிறது.வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் மண்பானை யில் தண்ணீர், தர்ப்பூசணி, ஜூஸ், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை தேடி அருந்தி வருகிறார்கள்.

எப்படியோ மார்ச் மாதத்தை தாண்டி விட்டோம் தப்பித்தோம் என்று நினைக்கும் நமக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் கோவை வெதர்மென் சந்தோஷ் கிருஷ்ணன்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கொங்கு பெல்ட்டுக்கான கத்திரி வெயில் இப்போது தொடங்குகிறது.உண்மையில் கொங்கு மண்டலத்தின் உச்ச கோடை மாதம் ஏப்ரல் ஆகும். அடுத்த 20 நாட்களில் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 37-42 டிகிரி செல்சியஸ் வரை உயரும். கோயம்புத்தூர் 38-39 இல் குடியேற வேண்டும். கிழக்கு நோக்கி திருப்பூருக்குச் செல்லும்போது, ​ஈரோட்டின் வெப்பநிலை 40ஐத் தாண்டும்.

எனவே அடுத்த 20 நாட்களுக்கு உச்ச கோடைக்கு தயாராகுங்கள்.நீரேற்றத்துடன் இருங்கள் மற்றும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீடு/அலுவலகத்திற்குள் இருங்கள்.நீங்கள் நீரேற்றம் இல்லாவிட்டால் வெப்பம் தொடர்பான பல உடல்நலப் பிரச்சினைகளை நீங்கள் காண்பீர்கள்.எனவே தண்ணீர் மற்றும் பழங்கள் மூலம் உங்களை அடிக்கடி குளிர்விக்கவும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க