• Download mobile app
24 Dec 2025, WednesdayEdition - 3605
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்ததாக சிறுவன் உட்பட இருவர் கைது

October 11, 2021 தண்டோரா குழு

கோவையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்ததாக சிறுவன் உட்பட இருவரை போலிசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஹரிபிரசாத், அனீஸ் நண்பர்களான இவர்கள் நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத இருவர் இவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தரமறுத்ததால், இவர்களிக்கிடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாகியுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ஹரிபிரசாத்தையும், அவரது நண்பர் அனீசையும் கடுமையாக தாக்கியதுடன், ஹரிபிரசாத்தை கத்தியால் குத்தியுள்ளனர்.இதில் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தவுடன் மர்ம நபர்கள். இருவரிடமும் இருந்த செல்போன்,மற்றும் ரூ 300 ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.புகாரின் பேரில் போலிசார் ஒரு சிறுவனையும்,நீலிகோணாம்பாளையம், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன், ஆகியோரை பிடித்து விசாரித்ததில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்த போலிசார், சிறுவனை சீர்திருத்தபள்ளிக்கும், சவுந்திரராஜனை நீதிமன்ற உத்திரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க