• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் ரூ.3.73 லட்சம் பறிமுதல்

April 5, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் விதம் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் மூன்று குழுக்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

அதுபோலவே வீடியோ கண்காணிப்பு குழு ஒரு தொகுதிக்கு இரண்டு குழுக்கள் வீதம் 12 மணி நேரம் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு குழுவிலும் துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவலர் தலைமையில் ஒரு சார்பு ஆய்வாளர், 2 காவலர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.73 லட்சம் பணம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ. 55.55 கோடி மதிப்பில் பணம், தங்க நகைகள்,மதுபாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க